சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா - அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்பு

Oct 31, 2018 12:21 AM 743

குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

குஜராத் மாநிலம் கேவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர், கடம்பூர் ராஜூ மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Comment

Successfully posted