சசிகலா தாயில்லை, பேய்.. - முன்னாள் அமைச்சர் விமர்சனம்

Jun 19, 2021 09:47 PM 1325

சசிகலா தாயில்லை, பேய் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மக்களால் வெறுத்து ஒதுக்கப்படுபவர் சசிகலா என விமர்சித்தார்.

சசிகலா ஒரு அரசியல் சக்தியே கிடையாது என்றும், அவர் தவிர்க்கப்பட வேண்டிய சக்தி என்றும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Comment

Successfully posted