இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து சத்யபிரதா சாஹு ஆலோசனை

May 18, 2019 06:16 AM 133

நான்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 19ஆம் தேதியான நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு, சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 4 தொகுதி இடைத்தேர்தலோடு, மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மற்ற மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

Comment

Successfully posted