டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை

Oct 17, 2018 06:42 PM 471

டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

டெங்கு, வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, தண்ணீர் தேங்குவதை தடுப்பது, பள்ளி வளாகத்தில், குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டிகள் மூடி வைத்திருத்தல், மாணவர்களுக்கு நோய் தொற்று அறிகுறி தெரிந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுள்ளது.

மாணவர்களுக்கு சுகாதாரமாண குடிநீர் வழங்குவதுடன், டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted