காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக கண்டெடுப்பு... காரணம் என்ன?

Jul 13, 2021 12:00 PM 979

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னால் காணாமல் போன பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி  அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

சந்தேகப்படும் நபரை கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் அவர்கள் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Comment

Successfully posted