புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Sep 28, 2020 08:57 AM 403

புதுச்சேரியில் அக். 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பத்து மற்றும் பன்னிரண்டாவது மாணவர்களுக்கு வரும் 5ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று ஒன்பது மற்றும் பதினொராவது மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பாளர் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted