மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா கெட் அப்பில் சிம்பு

Dec 15, 2019 05:05 PM 2707

தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைந்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் தனது தனித்திறமையால் பெரும் புகழை  பெற்றவர் நடிகர் சிம்பு . அதன்பின் சிம்புவின் திரைத்துறைப்பயணத்தில் கோவில், மன்மதன்,வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் பேர் சொல்லும் படங்களாக அமைந்தன. கடைசியாக இந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததாக சிம்பு மீது புகார் வைக்கப்பட்டு படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் சிம்பு மாநாடு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மாநாடு படத்தின் ஷூட்டிங் ஜனவரி கடைசியில் தொடங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் படக்குழு அறிவித்தது.

இதற்கிடையில் சபரிமலை சென்று திரும்பிய சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் சிம்புவை போல் தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். இதனால் எப்படி விண்ணைத்தாண்டி வருவாயா அவருக்கு திருப்புமுனையை கொடுத்ததோ, அதேபோல் மாநாடு படமும் பெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comment

Successfully posted