சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியீடு

Nov 25, 2018 07:44 PM 271

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கி இருக்கும் கனா படத்தின் டிரைலரை கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கியுள்ள கனா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து சென்சாரில் யூ சான்றிதல் பெற்று ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். திபு நைனன் தாமஸ் இசையில், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம், பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த படத்தின் டிரைலரை கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Comment

Successfully posted