சிவகார்த்திகேயன் நயன்தாரா படத்தை பற்றி இயக்குனர் வெளியிட்ட புதிய தகவல்

Oct 25, 2018 01:48 PM 1125

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே13 படத்தில் பணியாற்றிய போது நிகழ்ந்த அனுபவங்களை இயக்குனர் எம்.ராஜேஷ் பகிர்ந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஆகியோர் வேலைக்காரன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். பெயர் இதுவரை அறிவிக்கப்படாததால், இந்த படம் எஸ்கே13 என அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிகை ராதிகா இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், படத்தின் இயக்குனரான எம்.ராஜேஷ் படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியை இசையும் கொண்டாட்டமும் நிறைந்த வரம் என கூறியுள்ளார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பணியாற்றியது போலவே, ஆண்டுகள் பல கடந்தும் மாறாமல் இருப்பவர் நயன்தாரா என பாராட்டியுள்ளார். ராதிகா குறித்து பேசிய அவர், நேர்மறையான முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது பேச்சாற்றலால் செட்டில் அனைவரையும் கலகலப்பாக வைத்துக்கொள்பவர் சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என இயக்குனர் எம்.ராஜேஷ் கூறியுள்ளார்.

Comment

Successfully posted