டாக்டர் ரிலீஸ் : தான் நடித்த படத்தின் பாடல் வரிகளுடன் சிவகார்த்திகேயன் ட்வீட்

Oct 09, 2021 05:39 PM 2919

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த டாக்டர் படத்திற்கு, ரசிகர்கள் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா அருள்மோகன், வினய், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

ப்ளாக் ஹியுமர் காமெடி படமாக உருவாகியுள்ள டாக்டர், தெலுங்கில் வருண் டாக்டர் என்ற பெயரிலும் வெளியாகியுள்ளது.

 

 

இதனிடையே, நேற்றுவரை டாக்டர் படம் வெளியாவதில் சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

image

இறுதிநேரத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்கப்பட்டதால், படம் திட்டமிட்டபடி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் நடித்து வெற்றி பெற்ற எதிர்நீச்சல் படத்தின் பாடல் வரிகளை குறிப்பிட்டு, டாக்டர் திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

 

Comment

Successfully posted