வடகிழக்கு பருவமழையால் முழு கொள்ளளவை எட்டிய ராயர்பாளையம் சின்ன ஏரி

Nov 18, 2019 12:28 PM 95

வடகிழக்கு பருவமழையால் ராயர்பாளையம் சின்ன ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ராயர்பாளையத்தில் சின்ன ஏரி அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்த ஏரியின் முழுக் கொள்ளளவை எட்டியது. இதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதாலும், 500 ஏக்கருக்கு மேல் விவசாய பாசனம் நடைபெறும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களை தூர்வார அப்பகுதி விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Comment

Successfully posted