மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பது ஒரு போதும் பலிக்காது - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Nov 10, 2018 06:14 PM 389

மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பது ஒரு போதும் பலிக்காது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலுக்கான அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆட்சி கலைந்து விடும் என்ற ஸ்டாலினின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது.” என்றார். மேலும் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி கான்கிரீட் போட்டு ஆட்சி நடத்துகிறார். இந்த ஆட்சிக்கு இயற்கையும் ஒத்துழைக்கிறது.” எனத் தெரிவித்தார்

Comment

Successfully posted

Super User

சுடலை பகல் கனவை தகர்த்து இடைத்தேர்தல் வெற்றியை அம்மாவின் சமாதியில் சமர்பிப்போம்