புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர் வேலுமணி ஆய்வு

Nov 24, 2018 07:51 PM 321

கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு நிவாரணை உதவிகளை செய்துவருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டத்தின் வடவூர், சிக்கல்பட்டு, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது சிக்கல்பட்டு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 400 நபர்களுக்கு வேலை வழங்க அமைச்சர் வேலுமணி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

 

 

Comment

Successfully posted