தீபாவளிக்கு 20 ஆயிரத்து 567 பேருந்துகள் - போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 

Oct 11, 2018 07:09 PM 393

தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 11 ஆயிரத்து 367 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக கூறினார்.

தீபாவளி முடிந்து திரும்பி வருவதற்காக 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்க உள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதற்கான முன்பதிவு நவம்பர் 1 முதல் 5 -ம் தேதி வரை நடைபெறும் என்றும் 3,4,5 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கோயம்பேடு,தாம்பரம்,பூந்தமல்லி,மாதாவரம் உள்ளிட்ட இடங்களில் 30 முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும், 5 தற்காலிக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விஜயபாஸ்கர் எச்சரித்தார். 

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறிய அவர், சீருடை அணிந்திருந்தாலே இலவசமாக பயணம் செய்யலாம் என்றார். 

போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிழுவை தொகையை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்,போக்குவரத்துத்துறை சார்பில் 100 எலக்ட்ரிக் பேருந்துகள் விரைவில் வாங்க உள்ளதாகவும் , இதில் சென்னையில் 80, கோவையில் 20 பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted

Super User

மாண்புமிகு அம்மா வழியில் ஆட்சி செய்யும் மாண்புமிகு முதல்வர் அவர் களின் மக்களாட்சிக்கு உதராணம்


Super User

good