பத்து பைசாவுக்கு பிரியாணி - திருச்சியில் கடை முன் குவிந்த பொதுமக்கள்

Oct 11, 2020 12:49 PM 2317

திருச்சியில், பத்து பைசாவிற்கு பிரியாணி என்று அறிவிப்பு வெளியிட்ட உணவகம் முன்பு குவிந்த பொதுமக்கள், பிரியாணி தீர்ந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு, திருச்சி தில்லை நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்று, 10 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, பிரியாணியை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் 10 பைசாவுடன் பொதுமக்கள் காத்து இருந்தனர். பிரியாணி என்றவுடன், பாதுகாப்பான இடைவெளியை கைவிட்டு குவிந்த மக்களால், தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், காலை 10 மணிக்கு, 100 பேருக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Comment

Successfully posted