விளையாட்டுத் துறையில் தமிழகம் 3-வது இடத்திற்கு முன்னேற்றம் - விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பெருமிதம்

Oct 26, 2018 04:27 PM 493

அதிமுக அரசின் நடவடிக்கைகளால், விளையாட்டுத்துறையில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் நடத்தும், உடற்கல்வி தேர்வு தொடர்பான கேள்வி பதில்கள் அடங்கிய Physical Education என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பங்கேற்று நூலை வெளியிட்டார். விழாவில் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அரசு வேலைவாய்ப்பில் 3 சதவிகித உள் ஒதுக்கீடு அதிகரித்திருப்பதன் மூலம், விளையாட்டுத்துறையில் இருக்கும் மாணவர்களுக்கு அரசு துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறினார். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடற்கல்வியிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

Comment

Successfully posted