``தொண்டாமுத்தூர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துள்ளேன்”

Mar 31, 2021 05:41 PM 431

தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி தந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், நரசிம்மபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்காளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர், பாலக்காடு சாலை முழுவதும் அகலப்படுத்தி தடுப்புகள் அமைத்து விபத்துக்களை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பொள்ளாச்சி சாலை முழுவதும் சிறப்பான மேம்பாலங்கள் அமைத்து தரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட ஆளில்லாமல் காங்கேயத்தில் இருந்த ரவுடியை அழைத்து வந்து திமுகவினர் இங்கு நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted