இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Jun 05, 2021 05:02 PM 792

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை, முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு ஊரடங்கு காரணமாக உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை, முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏ-வுமான எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். மேலும், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களையும் அவர் வழங்கினார்.

Comment

Successfully posted