முதல்வர் திறந்து வைத்த ஆரம்பசுகாதார நிலையம் - புதிதாக திறப்பது போல பாசாங்கு செய்த ஸ்டாலின்!

Aug 29, 2020 03:50 PM 2644

சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனி 36 வது தெருவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில், ஆரம்ப சுகாதார மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை கானொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இது, பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை புதிதாக திறந்து வைப்பதைப் போன்று சர்ச்சையை ஏற்படுத்தினார். வாழைமரம், தோரணம் கட்டி, பெயர் பலகையை திறந்து வைத்ததோடு, ரிப்பன் வெட்டுவது போல பாசாங்கு செய்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது, அனைவரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது.

Comment

Successfully posted