மதுரையில் அம்மாவிற்கு வெண்கலச்சிலை திறப்பு..

Dec 05, 2019 12:19 PM 312

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 3ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அம்மா நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அம்மாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

image

இந்நிலையில் மதுரை கே.கே நகர் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா அவர்களுக்கு வெண்கலத்தால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாதகாலமாக சிலை கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நினைவு தினமான இன்று மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

 

image

Comment

Successfully posted