திமுக வழக்கறிஞர் உள்பட 3 பேருக்கு சம்மன்

Jun 13, 2021 06:25 PM 733

சென்னை தரமணி அருகேயுள்ள கல்லுக்குட்டையில், பொது இடத்தை ஆக்கிரமித்து அராஜகத்தில் ஈடுபட்ட திமுக வழக்கறிஞர் உள்பட மூன்று பேருக்கு, துரைப்பாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தரமணி அருகேயுள்ள கல்லுக்குட்டை திருவள்ளூர் நகரில், சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்த பகுதிக்கு தேவையான தண்ணீர் தொட்டிகளை பொது இடத்தில் வைத்து அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக திமுக-வை சேர்ந்தவர்கள் அந்த இடத்தை போலியான ஆவணங்களை தயார் செய்து, விற்றுவிட்டதாக புகார் எழுந்தள்ளது. இந்த நிலையில், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா ஆகியோர் தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும், இல்லையென்றால் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பெண்களை திமுகவினர் ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள், தி.மு.க.வினரை ஓடஓட விரட்டியடித்தனர்.

Comment

Successfully posted