தீபாவளியால் களைகட்டிய ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட் -விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

Nov 05, 2018 07:46 AM 316

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி மார்கெட்டிற்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

தென் தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கிருந்து ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் 70 சதவீத காய்கறிகள் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வாகனங்கள், விவசாயிகள், வியாபாரிகள் வருகையால் காந்தி மார்கெட் களைகட்டியது. இதனால் சில காய்கறிகளின் விலை உயர்ந்தும், சிலவற்றின் விலை குறைந்தும் காணப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் களைகட்டியதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Comment

Successfully posted