பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Sep 25, 2020 11:57 AM 743

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 29ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படும் என கருத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டப்படி தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, டெல்லியில் இன்று மதியம் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். அச்சந்திப்பின்போது, பீகார் மாநிலத் தேர்தல் அட்டவணையுடன், நாடு முழுவதும் காலியாக உள்ள 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comment

Successfully posted