சந்திரசேகர் தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றி

Oct 14, 2018 05:10 PM 482

சபரிமலை விவகாரத்தில் பொதுமக்கள் நடத்தும் போராட்டம், மக்கள் இயக்கமாக மாறி வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மதத்தின் பழக்க வழக்கங்களை எதிர்த்து வந்த நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாமிரபரணி புஷ்கரத்தில் கலந்து கொண்டது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய தமிழிசை, இது மக்கள் இயக்கமாக மாறி வருவதாக தெரிவித்தார். இந்த போராட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானது கிடையாது என்று அவர் விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted