தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு

Mar 29, 2019 04:14 PM 290

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி துவங்கிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வந்தது. இதில் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட 10 லட்சம்பேர் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வின் இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.45 மணிவரை நடைபெற்றது. தேர்வின் இறுதிநாளான இன்று மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். தேர்வு காரணமாக கடந்த சில தினங்களாக இருந்த மனஇறுக்கம் நீங்கியுள்ளதாகவும், ஆனால் சக நண்பர்களை பிரிவது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேல்படிப்பு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

Comment

Successfully posted