தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

Oct 17, 2018 05:34 PM 1382

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேர், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேருக்கு 3 மாத சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அபராதம் ஏதுமின்றி, வெளியுறவுத்துறை மூலம், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களுக்கு, அதிகபட்ச அபராதத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அபாரதத் தொகையும், சிறைத் தண்டனையையும் ரத்து செய்ய இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Comment

Successfully posted