கழிவறை நீரால் பால் காய்ச்சிய டீக்கடைக்காரர்

Jan 18, 2020 09:24 PM 441

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில கழிவறைகளுக்குப் பயன்படுத்தப்படும் நீரை எடுத்து பயன்படுத்திய டீக்கடை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் ரயில்களில் கழிவறைகளில் இருக்கும் டேங்குகளை நிரப்பப் பயன்படும் நீரைப் பிடித்து, பால் பாத்திரத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து குறிப்பிட்ட கடையை கண்டுபிடித்த ரயில்வே அதிகாரிகள், அந்த கடையை மூடி நடவடிக்கை எடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted