அழகம்மை,சுந்தரேஸ்வரர் கோவில் மாசி மாத தேரோட்ட திருவிழா

Feb 18, 2019 02:12 PM 141

நாகர்கோவிலில் உள்ள அழகம்மை, சுந்தரேஸ்வரர் கோயில் மாசிமாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அழகம்மன், சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் மாசி பெரும் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக விநாயகர் தேரில் எழுந்தருள, ஒன்றன் பின் ஒன்றாக மேள தாளங்கள் முழுங்க அழகம்மன், சமேத சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted