நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற நடராஜபெருமாள் ஆனந்த நடன காட்சி தரும் வைபவம்

Feb 10, 2020 09:16 AM 505

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் ஆலயத்தில், தைப்பூசத்தையொட்டி, ஆனந்த நடன காட்சி தரும் வைபவம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, நடராஜ பெருமாள் காந்திமதி அம்பாளுக்கு ஆனந்த தாண்டவ காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செளந்தர சபை மஹா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு, மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. தொடர்ந்து, சந்தி விநாயகர் ஈசான முக்கில் வைத்து, காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted