பிரசித்தி பெற்ற ஸ்ரீபோர்மன்ன லிங்கேஸ்வரர் கோயிலின் தேர்திருவிழா

Feb 23, 2019 11:02 AM 282

திருவண்ணாமலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் கோயிலின் தேர் திருவிழாவை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் தேர் திருவிழா 5 நாட்கள் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர், ராமச்சந்திரன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேர் திருவிழாவில் ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் மகா உற்சவ உலாவானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த தேர் விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted