தல 60 படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியானது..

Oct 18, 2019 06:33 PM 1911


வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, தல 60 திரைப்படமும் இருவரின் கூட்டணியில் உருவாக உள்ளது.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்தில் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

 

 

image

இந்நிலையில் தல 60 திரைப்படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்கு வலிமை என பெயர் வைத்துள்ளனர்.இதற்கு முன்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் ’வ’ வரிசை பெயர்கொண்ட விஸ்வாசம்,வேதாளம், வீரம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படமும் 'வ' வரிசையில் அமைந்துள்ளது.தற்போது வலிமை ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted