அஜித்தின் 61வது படமும் ஹிந்தி ரீமேக் தானா ?

Sep 04, 2019 06:13 PM 660

தல அஜித்தின் 61வது படமானது ‘ஆர்டிகிள் 15 ‘ என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.இந்த படமானது ஹிந்தி படமான ‘பிங்க்’படத்தின் ரீமேக்காகும்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்கினார்.தற்போது தல நடிக்கும் 60 வது படத்தையும் வினோத் இயக்கி வரும் நிலையில்,அடுத்த படம் குறித்த சில தகவல்களும் சிகியுள்ளது

அஜித்தின் 61வது படமானது ஹிந்தியில் வெளியான ‘ஆர்டிகிள் 15 ‘ திரைப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த படம் சாதி எதிர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றதை அடுத்து,இந்த படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார்.ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்ததால் ‘ஆர்டிகிள் 15 ‘ ரீமேக்கில் அஜித் நடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.

தற்போது வினோத் இயக்கி கொண்டிருக்கும் தல 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ‘ஆர்டிகிள் 15 ‘ ரீமேக் பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related items

Comment

Successfully posted