ட்விட்டரில் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள்..

Nov 13, 2019 10:56 AM 402


திரைத்துறையில் நல்ல நட்புடன் இருப்பவர்கள் விஜய்-அஜித்.இவர்களுக்கு இடையில் எந்த சண்டையும் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.ஆனால் ரசிகர்களுக்கு இடையில் மட்டும் ஏன் இத்தனை போட்டிகள் என்பதை சில நேரத்தில் அவர்களால் கூட புரிந்துக்கொள்ள முடியவில்லை.

மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ட்விட்டரில் எதிர்பாராத hashtag ட்ரெண்டாகும்.சில நாட்களுக்கு முன்பு நேசமணி hashtag உலகளவில் ட்ரெண்டாகி, பிரபலங்கள் கூட அந்த hashtag-ஐ பயன்படுத்தி பதிவிட்டனர்.

image

 

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட hashtag பட்டியலில் விஸ்வாசம் இடம்பிடித்திருப்பது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது.எனவே viswasamtopinfluencialmoment என்ற hashtag-ஐ ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.அதே போல் 2012ஆம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி துப்பாக்கி திரைப்படம் வெளியாகிவுள்ளது.தமிழில் வெளிவந்த படங்களிலே 200 நாட்கள் ஓடி சாதனை படைத்த பெருமையும் துப்பாக்கி படத்திற்கு உண்டு.இன்றுடன் படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகியதால் 7yearsofmegaBBthupakki என்ற hashtag-ஐ விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

Comment

Successfully posted