கன்னியாகுமரி, தானுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி தேரோட்டம்

Dec 22, 2018 01:17 PM 330

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தானுமாலயன் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ளது தானுமாலயன் சுவாமி கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மார்கழி திருவிழா பிரசித்தி பெற்றது. அதன் படி இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி தேர்திருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விநாயகர் தேர் முன் செல்ல தொடர்ந்து சுவாமி தேரும், அம்மன் தேரும் வலம் வந்தது. இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted