பஞ்சரத்ன கீர்த்தனையை துவக்கிவைத்த தமிழக ஆளுநர்

May 11, 2019 12:14 PM 127

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி திருவாரூரில் பஞ்சரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

திருவாரூரில் அவதரித்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஸ்ரீதியாக பிரம்மம், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்திவிழாவையொட்டி ஆண்டுதோறும் இசைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த ஜெயந்திவிழாவையொட்டி இசைநிகழ்ச்சி கடந்த 6ம் தேதி துவங்கியது. இறுதிநாளையொட்டி தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறந்த இசை கலைஞர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகளையும் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி சங்கீத மும்மூர்த்திகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Comment

Successfully posted