காவல்துறை சார்பில் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை துவக்கம்

Jan 09, 2019 04:13 PM 348

மதுரையில் காவல்துறை சார்பில் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல்துறை சட்டஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன், மதுரையில் காவல்துறை முன்நடத்தை சரிபார்ப்பு சேவை மையத்தை துவக்கி வைத்தார். இதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.eService.tnpolice.gov.in என்ற இணையதளம்மூலம் வேலைக்கு ஆள் எடுத்தல், வாடகைதாரர்கள், வீட்டு வேலையாட்கள் உள்ளிட்டோரின் விவரங்களை சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தனியார் நிறுவனங்களும் இந்த விவரங்களை சரிபார்க்க இந்த இணையதளம் வழிவகை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவருக்கு 500 ரூபாய் மற்றும் தனியார் நிறுவனங்கள் 1000 ரூபாய் செலுத்தி இந்த சேவையை பெற முடியும். மேலும் இணையதளம் மூலம் மக்கள் இருந்த இடத்திலிருந்தே இந்தத் தகவல்களை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted