ஓசூர் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரித்த இருவர் கைது

Jun 13, 2019 02:44 PM 83

ஓசூர் அருகே நாட்டுத்துப்பாக்கி தயாரித்து வந்த இருவரை நக்சல் ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள தளி வனப்பகுதியில் நாட்டுத்துப் பாக்கியை இருவர் தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நக்சல் ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், கள்ளத் துப்பாக்கிகளை தயாரித்து வந்த இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும், நெலமாறு கிராமத்தை சேர்ந்த நாஞ்சாச்சாரி உபேந்திரா என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்தில் நக்சல் ஒழிப்பு போலீசார் ஒப்படைத்தனர்.

Comment

Successfully posted