எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா

Feb 12, 2019 05:34 PM 112

சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, தமிழ்நாடு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நெல்லையில் நடத்தப்பட்டது.

மிருதங்க கலைஞர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவலுக்கு அண்மையில் சாகித்ய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை பாராட்டும் விதமாக, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கம் சார்பில் நெல்லையில் விழா நடத்தப்பட்டது. விழாவில், காருக்குறிச்சி அருணாச்சலம் பிள்ளையின் மனைவி கௌரவிக்கப்பட்டார். இதில், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted