தொழிலதிபர் வீட்டில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை - வீட்டுப் பணிப்பெண்ணிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மீட்பு

Oct 28, 2018 04:06 PM 481

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் 14 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில், வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணிடம் இருந்து 4 லட்சம் ரூபாயைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் வசித்துவரும் சென்னியப்பன் என்பவரது வீட்டில், பெங்களூருவைச் சேர்ந்த அம்மு என்ற பெண், வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சில மாதங்களாக சென்னியப்பன் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போயுள்ளது. கணக்கிட்டுப் பார்க்கும்போது இதுவரை 14 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரியவந்துள்ளது. சென்னியப்பன் அளித்த புகாரின் பேரில், வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல் துறையினர் விராசணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் வேலை செய்து வரும் அம்மு பணம் திருடிச் செல்வது தெரியவந்தது. அம்முவிடம் விசாரித்ததில், பெங்களூருவில் உள்ள உறவினரிடம் பணம் கொடுத்து வைத்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அம்முவிடம் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், அவரிடம் இருந்த 4 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர்.Comment

Successfully posted