ஆவின் விரிவாக்க அலுவலர் வீட்டில் 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை

May 02, 2019 11:49 AM 493


திருவண்ணாமலையில் 30 சவரன் தங்க நகைகளை திருடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை நேதாஜி நகரை சேர்ந்த சரவணன் என்பவர் ஆவின் பாலகத்தில் விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.வீட்டிலிருந்த 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted