தேனி: உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக கூறியது ஏன்? ஊழியர்களுக்கு நோட்டிஸ்

Jul 05, 2021 02:46 PM 8122

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கியது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாகக் கூறிய விவகாரம் தொடர்பாக துறை தலைவர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

துறைத் தலைவரின் விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.

Comment

Successfully posted