14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 27, 2020 04:26 PM 336

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்பட 14 மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 30-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted