கர்நாடகாவில் 2.0 படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் - வாட்டாள் நாகராஜ்

Nov 10, 2018 09:17 AM 386

நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அக்சய்குமார் நடிப்பில் 600 கோடி ரூபாய் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் 2.0 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 29-ம் தேதி தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் தமிழ், இந்தி மொழி படங்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த கோரி கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன்பு கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் 29-ம் தேதி வெளிவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

 

Comment

Successfully posted

Super User

நீ யாரு முதல்லே அத சொல்லு