வட்டி தொழில் மட்டுமா செஞ்சான்? கணவனால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மனைவியின் குமுறல்!

Jul 29, 2021 10:57 AM 2514

சென்னையில் மனைவியை வீட்டைவிட்டு துரத்திவிட்டு, பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


சென்னை பாண்டிபஜாரைச் சேர்ந்த திவ்யா - முத்து, தம்பதிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

முத்து பணிக்குச் செல்லாமல், தொழில் தொடங்குவதற்காக மனைவியின் நகைகளை விற்று, பணம் பெற்று, அந்த பணத்தில் வட்டிக்கு விடும் தொழில் செய்துவந்துள்ளார்.

மேலும், ஏஞ்சல் என்ற பெண்ணை வீட்டுக்கு வேலைக்காரியாக அழைத்துவந்து, அவருடனும் தகாத உறவில் இருந்துள்ளார்.

இதனை திவ்யா கண்டித்த நிலையில், வேலைக்காரியான ஏஞ்சலும், முத்துவும் கொலை மிரட்டல் விடுத்து, திவ்யாவையும் குழந்தைகளையும் அடித்து வீட்டைவிட்டு துரத்தியதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

image

மேலும், ஏஞ்சலுடன் சேர்ந்து பல பெண்களுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து, கடன் கட்ட முடியாதவர்களை உல்லாசமாக இருக்க வலியுறுத்தி முத்து மிரட்டுவதாகவும், தன்னையும் அந்தரங்கமாக வீடியோ எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும், இழந்த பணம் மற்றும் நகைகளை மீட்டு தருமாறும் புகாரில் கோரியுள்ளார்.

Comment

Successfully posted