இளையராஜா இசையில் “ துப்பறிவாளன் 2’’

Sep 11, 2019 03:28 PM 244

நடிகர் விஷாலின் அடுத்த படமான  துப்பறிவாளன்- 2 வில் இளைராஜா இசையமைக்க உள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. 2004 - யில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய விஷால் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான அயோக்யா திரைப்படம் “ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எடுத்துரைக்கும் கதை களமாக, அமைந்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. விஷால் தற்போது தனது அடுத்த படமான துப்பறிவாளன் -2 ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இப்படம் துப்பறிவாளன் முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கின் இயக்கத்திலும் பிலிம் பேக்டரி தயாரிப்பிலும் உருவாகிறது. இப்படத்தில் இளைராஜா இசை அமைக்க உள்ளதால் அவரிடம் படக்குழுவினர் ஆசி பெற்று வந்துள்ளனர். துப்பறிவாளன் படத்தின் முதல் பாகம் - போலவே இரண்டாம் பாகம் action மற்றும் thriller படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நடிகர் விஷால் சுந்தர் .சி இயக்கத்தில்
" action " என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளாராம்.

 

Comment

Successfully posted