சிறுமியை கர்ப்பமாக்கிய விவகாரம் - டிக்டாக் புகழ் பார்கவ் கைது

Apr 22, 2021 12:16 PM 1894

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆந்திராவின் டிக்டாக் புகழ் பார்க்கவ் என்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கொத்தவலச கிராமத்தை சேர்ந்தவர் பார்க்கவ். Fun Bucket Bargav என்ற பெயரில் youtube சேனல் நடத்தி வரும் இவர், டிக்டாக்கில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து புகழ் பெற்றவர். இந்த நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பார்கவிற்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் சேர்ந்து ஒன்றாக பல்வேறு டிக் டாக் வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை என்று கூறி பழகி வந்ததால், சிறுமியின் பெற்றோர் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, பார்கவ் தொடர்ந்து பாலியல் வண்கொடுமை செய்ததே கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. இது பற்றி சிறுமியின் பெற்றோர் பெண்டுர்த்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted