பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Jan 12, 2021 06:48 AM 2618

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பெறுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு ஜனவரி 25ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, வெல்லம், முழு கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பரிசுத் தொகுப்பு மற்றும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் ரொக்கம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பினை ஜனவரி 13ஆம் தேதி வரை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், விடுபாடின்றி அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க ஏதுவாக ஜனவரி 18 முதல் 25 வரை வழங்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஜனவரி 18 முதல் 25 வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் வழங்கவும், துணிப்பை பெறாதவர்களுக்கு அதனையும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted