ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பு

Jan 11, 2020 08:48 PM 2314

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 560 ரூபாயாக உள்ளது...

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கேரட் தங்கம் கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 11 ரூபாய்க்கும் , சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 820 ரூபாய்க்கும்
சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை
செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comment

Successfully posted