தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 குறைந்தது

Jan 09, 2020 02:55 PM 2133

நேற்று 528 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத வகையில் விற்பனையான தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை நேற்று 528 ரூபாய் உயர்ந்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 67 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 25 ரூபாய்க்கும், சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து 32 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 67 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 830 ரூபாயாகவும், சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 640 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. அதேபோல் வெள்ளியைப் பொறுத்தவரை கிராமுக்கு 1 ரூபாய் 10 காசுகள் குறைந்து 51 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 51 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Comment

Successfully posted