அழகே பொறாமை படும் பேரழகி : த்ரிஷாவின் போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..

Dec 18, 2019 06:04 PM 2216


90s இளைஞர்கள் முதல் 2000 இளைஞர்கள் வரை அனைவருக்கும் கனவு கன்னியாக வலம் வருபவர் த்ரிஷா.கில்லி தனலட்சுமியில் தொடங்கி 96 ஜானு வரை அவர் நடித்த கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை.

96 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் நடித்தார்.பின்பு கர்ஜனை,பரமபதம் விளையாட்டு, ராங்கி ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு  ’caption this ’என்று கூறியிருந்தார்.அதனால் ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்கவிடுகின்றனர்.அழகே பொறாமை படும் பேரழகி, ஏஞ்சல் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறது, தென்னிந்தியாவின் இளவரசி,அழகான ராட்சசியே இப்படி அடிக்குக்கொண்டே இருக்கின்றனர்.இவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் த்ரிஷா நடிக்கும் கர்ஜனை திரைப்படம் 2020ம் ஆண்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted